Ad Code

Responsive Advertisement

பயந்தால் உடல் மெலிந்து போகுமா?

 ஒருமுறை கிருஷ்ணதேவராயர் , தெனாலிராமனுடன் இன்னொரு அமைச்சரையும் அழைத்தார் . இருவருக்கும் சம எடை கொண்ட இரண்டு ஆட்டுக்குட்டிகளை ஆளுக்கொன்றாய் கொடுத்து உங்கள் இருவருக்கும் 30 நாட்கள் தருகிறேன் . அரண்மனையில் இருந்து வரும் தீவனங்களை கட்டாயம் உங்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த ஆடுகளுக்கு கொடுக்கவேண்டும் . ஆனால் 30 நாட்கள் கழித்து வரும்போது ஆட்டின் எடை குறைந்து இருக்க வேண்டும் .இதுதான் என் கட்டளை என்கிறார் . அதன்படி தினமும் ஆட்டிற்கு கொழுத்த தீவனங்கள் அரண்மனையில் இருந்து வந்த வண்ணம் இருந்தன . 30 நாட்களும் கழிந்தன . அடுத்த நாள் இருவரும் ஆட்டுக்குட்டிகளை அழைத்துவருவதற்கு கட்டளையிடப்பட்டனர் . அமைச்சர் வளர்த்த ஆடு கொலு கொழுவென்று இருந்தது . ஆனால் தெனாலிராமன் வளர்த்த ஆடோ நோஞ்சான் போலிருந்தது . போட்டியில் தெனாலிராமன் வென்றார் . அரசர் தெனாலிராமனிடம் கேட்கிறார் அது எப்படி இருவருக்கும் சமமான தீவனங்கள் கொடுக்கப்பட்டது நீங்கள் இருவரும் அதை கொடுத்ததை நானும் உறுதி செய்துகொண்டேன் அப்படி இருக்க எப்படி உன்னுடைய ஆடு மட்டும் கொடுத்த எடையைக்காட்டிலும் குறைவானது எனக்கு குழப்பமாக உள்ளது என்றாராம் . அதற்கு தெனாலிராமன் " அரசே , நான் ஆடு கட்டியிருந்த கொட்டிலுக்கு எதிரில் ஆட்டிற்கு தெரியும்படி ஒரு ஒநாயையும் கட்டிப்போட்டிருந்தேன் . ஆடு எவ்வளவுதான் தெவ்வனங்கள் தின்றாலும் இந்த ஓநாய் நம்மை கொன்றுவிடுமோ என்ற பயத்திலேயே இருக்கும் . அதனால் அது என்னதான் சாப்பிட்டாலும் நிச்சயம் அதன் ஆரோக்கியத்தை பாதிக்கும் . எடையும் குறைந்தது .இதுதான் நடந்தது . என்றதும் அரசர் தெனாலிராமனை ஆரத்தழுவி பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்தார் . 


நீதி :  கொரோனா நோயை காட்டிலும் கொடியது , அந்த நோயை பற்றிய பயம் .நோய்க்கும் மருந்தில்லை , நோயை பற்றிய பயத்திற்கும் மருந்தில்லை . நாம் அந்த அமைச்சரா இல்லை தெனாலிராமனை என்பதை நாம்தான் முடிவுசெய்துகொள்ள வேண்டும் ......All Is Well.

Post a Comment

0 Comments